ஹேய் நிஜமே - எனை நோக்கி பாயும் தோட்டா (Hey Nijame from Enai Noki Paayum Thota)

Date: May 18, 2020

Song
(பாடல்)
Movie
(படம்)
Singer(s)
(பாடகர்)
Music Director(s)
(இசையமைப்பாளர்)
Lyrics
(பாடலாசிரியர்)
Hey Nijame Enai Noki Payum Thota Bombay Jayashri Darbuka Siva Madan Karky
ஹேய் நிஜமே எனை நோக்கி பாயும் தோட்டா பம்பாய் ஜெயஸ்ரீ தர்புக சிவா மதன் கார்க்கிPrelude

நடிகையின் மடியில் ரசிகன் நான் விழுந்து
விழுந்த நொடியில் வருடங்கள் அடங்க
கனவா? திரையா? நிஜமா?
எதிலே நான் வாழ்ந்தேன்!
முகமா? அகமா? சுகமா?
எதிலே நான் வீழ்ந்தேன்.


பாடல் வரிகள்

ஹேய் நிஜமே கலையாதே
கனவு நீ அல்ல
பிரிந்திட வழி
ஆயிரம் முயலாதே

நெருங்கிட வழி ஒன்றை
நான் சொல்கிறேன்
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்
நான் சொல்கிறேன்... வா... அருகே

சுழலாதிரு உலகே
மீனிகழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்
முடிக்கா முத்தங்களின்
மிச்சங்களில் வாழ

சுற்றாதிரு சற்றே
காதல் நொடி நீள
பிரிவெல்லாமே
இது போல் மாறாதா

தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்
ஓயாத காற்றாக என்னோடு நீ
நிற்காத பாட்டாக உன் காதில் நான்
வீழாத உற்சாக ஊற்றாக நீ

மாறாத இன்பத்து பாலாக நான்
தீராத தீக்காமம் ஒன்றாக நீ
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ

வாசத்தின் வாசலில் தோரணம் நான்
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ
யாசித்து நீ கேட்ட இரவாக நான்
யாருக்கும் தெரியாத உறவாக நீ