வனவாசம் (Vanavasam)

by கண்ணதாசன் (Kannadasan)

Date: May 5, 2019

Rating: 4/5

‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி. ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறுமல்ல இது; ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்க்கையுமல்ல இது. வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு, தாழ்வுகளே இந்நூல்.

What a great thing to say in the introduction. Right off the bat, he's indicating that he's lived an interesting life filled with mistakes. It's not some weird narcissitic pride thing like the movie Sanju. Rather, he says it in a casual, off-hand, matter of fact way. And his reasoning for doing so is perfect - "காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்த பின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது." (Translation: He read Mahatma Gandhi's autobiography and felt like being honest )

Dying men are honest. They've got nothing to lose (except maybe their legacy?). I can understand the honesty of someone like Paul Kalanithi. But this guy goes rogue when he's got everything to lose! He talks about his hedonistic side - lechery, drunken debauchery, drugs, you name it! The things he talks about openly are still a huge taboo in India, controversial in the Western world. I still fear talking like that. Yet this guy goes ahead and does this right from the 50s! What a man!

I started this book right after When Breath Becomes Air. It was a strange choice. But I was looking for honest writing. This was a book my Dad recommended. I've always heard a lot about Kannadasan. He's a legend among the Tamil diaspora. But if you ask me to name a single song penned by him, I'd draw a blank. Nevertheless, I've been curious about Tamil icons for a while now. I definitely made the right choice picking this book. It brings to life a different time in TN. The rise of DMK has always been fascinating to me. Though I vehemently disagree with their ideals, I still respect their meteoric rise to political power. Karunanidhi and Anna Durai changed the political landscape of TN forever. They've managed to etch their names in history. Getting the inside scoop from someone like Kannadasan is just amazing to say the least.

I got intrigued just by the preface. I remember thinking that it'd shape up to be an extraordinary book. And it did! He's humble enough to think he hasn't achieved much in life. I liked how he described big events in his life in such a casual, off-hand manner. Also, an intriguing approach to write his own life story as a third person account. Almost as if he was watching the highlight reels of his life and narrating it with a detached-attachment (Brownie points if you got the Sila Nerangalil Sila Manithargal reference). நான் என்று எழுத வேண்டிய இடங்களில் அவன். அற்புதமாக இருக்கிறது.

I knew I shouldn't expect high moral standards from DMK. But damn my respect for Karunanithi and Anna Durai fell even further thanks to multiple anecodes by Kannadasan. There are multiple stories involving hookers, drunken debauchery, DMK party cadres bamboozling prostitutes, Karunanithi writing about a father daughter incest story under the guise of poverty in "thullu tamizh", etc.


Notes about his early life

Paints a beautiful picture of a flawed man. His Dad with some amazing qualities, but also a huge self-destructive tendency as a gambling addict, a sweet, strong mom who was a prisoner of her times, collateral damage to his Dad's antics. Reminiscent of Iraivi and my own life experiences. Brilliant as a kid, good at studies, but always getting into trouble and mischievous. Ends preface with something his hostel warden said when he graduated from 8th grade - "நீ எங்க போனாலும் உறுபடவே மாட்ட". He dropped out after 8th grade, yet his command over language is extraordinary.

“எட்டாவது வரை படித்தவர் எழுத்தாளராக முடியுமா?” என்று கூட ஒருவர் கேட்டிருந்தார். ஆனாலும் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. எழுத்தாளராவதற்குப் படிப்புத்தான் தகுதியா? அவன் நம்பவில்லை. படிப்பு வேறு, சிந்தனை வேறு என்பதில் அவனுக்குத் திடமான நம்பிக்கை இருந்தது.


Quotes that I liked

கடல் அலை, படபடவென்று கரையில் மோதுவதை அவன் கண்டான். ஒவ்வொரு தடவையும் உள்ளே போய்த் திரும்புகிற அலை, எதையாவது கொண்டுவந்து வெளியில் போடுகிறது. நண்டுகள், ஒருவகை நத்தைகள், சிலவகைக் கிளிஞ்சல்கள், சங்குகள், தெறிக்கப்பட்டு விழுந்த சில கட்டைகள்-எதையாவது கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. அறிவு என்பது என்ன? இதுதான்! படிக்கின்ற பொழுது உள்ளே போய், ஒரு புதுப்பொருளை வெளியே கொண்டு வந்து தள்ளுகிறது. அவ்வளவுதான்!

திட்டமில்லாத வாழ்க்கையில் தொல்லைகள் குறைவதேயில்லை. ஆனால், திடீர் திடீர் என்று குறைவதுபோல் தோன்றிக்கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்குத் திறமை இருந்தால் மட்டும் போதாது. சந்தர்ப்பம் அமைவது மிகவும் முக்கியம்.

துயரங்களுக்குத் தனிமை பொல்லாதது. அது துயரை வளர்ப்பதன்றிக் குறைப்பதில்லை.

தன்னைத் தாழ்த்திக் கொண்டு இன்னொருவரை உயர்த்துவான். அதுதான் திறமைக்குத் தரும் மரியாதை என்றே அவன் கருதினான். இந்தச் சுபாவத்தை இறுதி வரை இறைவன் அவனோடு வைத்திருக்க வேண்டும்.

மனிதனுடைய திறமை பெரிதல்ல; கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கின்றது.

“கலங்காதிரு மனமே-உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே”

எல்லோராலும் கவனிக்கப்படுகிற மனிதனைவிட, யாராலும் கவனிக்கப்படாதவன் அமைதியாகவே வாழ்கிறான். விளம்பரம் பெற்ற மனிதன் பெரும்பாலும் போலி வாழ்க்கையே வாழ்கிறான்.

‘தமிழ்ப் பண்பாடு! தமிழ்ப் பண்பாடு’ என்ற கூக்குரல்கள் மேடையிலே கேட்கும். தன்பாடு தீரும் வரைக்கும்தான் அந்தப் பண்பாடெல்லாம்!

‘ஆடெரி படர்ந்த, கோடுயர் அடுப்பில்’ வறுமையைக் கண்டான் தமிழ்ப் புலவன். அணிவதற்கு மாற்றுடையில்லாமல், பெண் பார்க்க வந்தவர்களின் முன்னால் வர முடியாமல், அடுக்களைக்குள் தவித்துக்கொண்டிருந்த அழகு மயிலைக் காட்டினான் ஒரு மலையாள ஆசிரியன். ஒரு துண்டு ரொட்டிக்காக ஓடி அலைந்தவன் கதையை உருக்கமாகச் சொன்னான் ரஷ்யக் கதாசிரியன். கோவணத்திற்குத் துணி இல்லாமல் தேசியக் கொடியையே கோவணமாக்கியவன் கதையைத் தெளிவாகச் சொன்னான் வடநாட்டு முற்போக்குக் கதாசிரியன். வறுமையின் கொடுமையைச் சித்தரிக்கும் ‘ஏழை படும் பாடு’ நாயகன், ஏழையின் இருதயத்தைப் படம் பிடிக்கும் ‘இளிச்சவாயன்’ இருவரும் விக்டர் யூகோவின் பாத்திரங்கள். பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதையெழுதும்போது, பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால், மகளைக் கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் ‘முற்போக்குக்’ கதாசிரியர்.

‘பார்ப்பானையும் பாம்பையும் கண்டால், பாம்பைக் கொல்லாதே, பார்ப்பானைக் கொல்லு.’
Disclaimer: I don't endorse this opinion, just found it funny in a dark sense.

வஞ்சகர்கள் ஒரு சாதியில் மட்டும் இல்லை. எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள்.

புகழ்! அதைத் தமிழன் மூன்று எழுத்துக்களுக்குள் அடக்கி விட்டான்.

பத்துப்பேர் தன்னைக் கவனிக்கிற மாதிரி, தான் வளர்ந்துவிட்டோம் என்பதை நினைக்கும்போதே மனிதன் உடம்பும் தலையும் கனத்துவிடுகிறது.

எந்தச் சமயத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் ஆத்திரமடையாமலிருப்பது என்பது அசாதாரணமான குணம்.

கானல் நீரிலே விண்மீனை வேட்டையாடுவதுபோல், இல்லாத ஒன்றிலே எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிய ஓர் அரசியல் கட்சியாக அன்று தி.மு.கழகம் இயங்கியது உண்மை.

வாழ்க்கையில் ஒருவனுக்குத் திட்டமில்லாமல்போனால்- அவனது எல்லா அனுபவங்களும் கசப்பாக இருக்கும் என்பதற்கு அவன் உதாரணம். தெளிவில்லாதமனம் அலை பாய்வதினால் ஏற்படும் குழப்பம்-அவனுக்கே சொந்தமான ஒன்று.

நியாயங்களை மதித்து அநியாயத்தை எதிர்த்து, தாழவேண்டிய நேரத்தில் தாழ்ந்து, எழ வேண்டிய நேரத்தில் எழுந்து, கொஞ்ச வேண்டிய நேரத்தில் கொஞ்சி, கோபிக்கவேண்டிய நேரத்தில் கோபித்து, அஞ்ச வேண்டிய நேரத்தில் அஞ்சி, ஆர்ப்பரிப்பு தேவைப்படும் நேரத்தில் ஆர்ப்பரித்து வளைந்தும் குழைந்தும் நிமிர்ந்தும் வாழ வேண்டிய பூமியில் அதன் கல்லிலும் மோதினான்; காற்றிலும் மோதினான்.

ஆனால் அந்த நிலையிலும் பனித்துளியைத் தேடிப்பிடிக்கும் சக்கரவாகப் பட்சிபோல்-பயனுள்ள இலக்கியங்களைப் படிக்கத் தவறவில்லை. துன்பத்தில் இன்பம் இது. தீமையில் நன்மை இது. நஷ்டத்தில் லாபம் இது. தென்றலில் பணம் போனது. அறிவு வந்தது. கட்சியில் அறிவு போனது; தெளிவு வந்தது. அவன் சொல்வதெல்லாம் உண்மையைத் தவிர வேறில்லை. அன்றையக் கட்சி வாழ்க்கையில் ஒவ்வொரு படியாகத் தனித்தனியாக அவன் விவரிக்கத் தொடங்கினால், ஒரே மாதிரியான அருவருக்கத்தகுந்த அம்சங்களாகவே அவை இருக்கும்.

நெஞ்சத்தால் ஒரு மனிதன், சொல்லால் ஒரு மனிதன், செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவம் எடுக்கும் உலகத்தில் அவன் மட்டும் ஒரே மனிதனாக வாழ்ந்து விட்டான்.

அது வேண்டும் இது வேண்டுமென்கிற ஆசை முடிந்துவிட்டால், வாழ்க்கை சுவை நிரம்பியதாக ஆகிவிடுகிறது. ஆசை, அதற்கான முயற்சி, முயற்சியில் பரபரப்பு. பரபரப்போடு பயம், பயத்தில் நாலுபேர் துணை, துணை செய்வோருக்கு உதவி, உதவி செய்வதற்கு விளம்பரம். ஒன்றைத் தொடர்ந்து ஒன்று வாழ்விலிருந்து நிம்மதியை அழித்துவிடும் நிலையைவிட்டு அவன் பறந்துவிட்டான்.

“நான் நானாக, எனக்குள் எனக்காக, என் பொருட்டுத் தனியாக, அடங்கி அமைவுற்றிருக்கிறேன்.”

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.

“தலைவர்களென்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் சிறுவர்களாகத்தான் இருக்க முடியும்” என்றான்.

ஒன்றுமில்லாத போதுதான் உறவு நெருக்கமாகிறது!

கொலை உட்பட, எந்தப் பாவத்திற்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்- ஒரு புனிதமான காரியத்தைத் துவங்கிக் கெடுத்தபாவத்திற்கு மன்னிப்பு இல்லை.

அனுதாபத்துக்குரிய நிகழ்ச்சிகள்தான் சிலரது நட்பை உறுதி செய்கின்றன.